ரணசிங்க முத்தரையன்
இன்று கந்தர்வகோட்டை அருகில் உள்ள நொடியூர் கிராமத்திற்கு ஒரு வேலையாக சென்றிருந்த போது அங்கே மிகப்பழமையான சிவாலயம் ஒன்று இருப்பதை காண நேர்ந்தது, பராமரிப்பே இல்லாமல் இருந்த அந்த சிவாலயத்தை காணும் போதே மனம் மிகவும் வேதனையடைந்தது, நம்முடைய மூதாதையர்கள் எத்தனை சிரமப்பட்டு இதுபோன்ற காலத்தால் அழியாத காவியங்களை நமக்காக செய்து வைத்திருந்தார்கள், நம்மால் அதை பாதுகாக்கக்கூட முடியாமல் போனது வேதனையின் உச்சம்... இந்த ஊரில் கிடைத்த மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த ரணசிங்க முத்தரையன் கல்வெட்டே இப்பகுதியில் கிடைத்த காலத்தால் முந்திய முதல் கல்வெட்டாகும் அதன் காலம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது... நம்மால் இனி புதுமையாக எதையும் நம்முடைய முன்னோர்களைப்போல வலிமையாக படைத்துவிட முடியாது, ஆகையால் அவர்கள் படைத்து நமக்களித்த பொக்கிஷங்களையாவது பாதுகாக்க முயல்வோம்...